திருச்செங்கோடு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி.

X
Tiruchengode King 24x7 |23 Jan 2026 9:10 PM ISTதிருச்செங்கோடு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி. திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை துணை கண் காணிப்பாளர் கிருஷ்ணன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்
ஜனவரி முதல் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை ஒரு மாத காலம் சாலை பாதுகாப்பு மாத விழா தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கொண்டாடப் படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் இருந்து தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் நடராஜன் தலைமை வகித்தார். வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சாலை சங்ககிரி சாலை வழியாக வந்த பேரணி மீண்டும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை அடைந்தது. வழிநெடுகிலும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முழக்கங்களை ஊழியர்கள் எழுப்பியபடி வந்தனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதே, நெடுஞ்சாலை விதிகளை மதிப்பேன், சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க மாட்டேன், தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்கக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த பேரணியில்உதவி பொறியாளர்கள் திருச்செங்கோடுமோகன்ராஜ் பள்ளிபாளையம் மணிகண்டன் ஆகியோர் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
