தமிழகவெற்றி கழகம் மக்களிடம் தான் கூட்டணி தலைவர் விஜய்அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் பேட்டி
Tiruchengode King 24x7 |23 Jan 2026 9:17 PM ISTதமிழகவெற்றி கழகம் மக்களிடம் தான் கூட்டணி தலைவர் விஜய்அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்செங்கோட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொதுச் சின்னமாக வழங்கப்பட்ட விசில் பொதுமக்களுக்கு வழங்கி நோட்டீஸ் கொடுத்துபிரச்சாரம்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்புதிதாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் விசிலுடன் சென்று பொது மக்களை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகரில் அண்ணா சிலை அருகில் இருந்து கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தொண்டர்களுடன் விசில் மற்றும் இனிப்பு விசில் சின்னம் குறித்த துண்டறிக்கை ஆகியவற்றை பொதுமக்களிடம்வழங்கி விசில் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி பிரச்சாரம் மேற்கொண்டார்.மேற்கு ரத வீதியில் கடை கடையாக ஏறி இறங்கியும் வழியில் சென்ற பொதுமக்கள் பெண்கள் சிறுவர் சிறுமிகள் ஆகியோருக்கு விசில் மற்றும் இனிப்புகள் வழங்கி விசில் சின்னம் பொறித்த துண்டு பிரசுரத்தை வழங்கி வாக்கு கேட்டார் தொடர்ந்து சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அங்கு அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது கோவிலில் சற்று நேரம் தியானம் மேற்கொண்டார் தொடர்ந்து கோவிலை விட்டு வெளியே வந்த அருண்ராஜ் கோவிலுக்கு வெளியே கூடி இருந்த பக்தர்கள் கடை வைத்திருந்தவர்கள் ஆகியோரிடம் விசில் வழங்கி வாக்கு சேகரித்தார் தொடர்ந்து மேற்கொள்ளாத வீதியில் மற்றொரு பகுதி வழியாக அண்ணா சிலை வரை கடை மற்றும் வீடுகளில் ஏறி இறங்கி விசில் பிடிப்பு துண்டு பிரசுரம் ஆகியவற்றை வழங்கினார் நிகழ்ச்சியின் போது கட்சி முன்னணியினர்,மகளிர் அணியினர் பலரும் உடன் இருந்தனர்.கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அருண் ராஜிடம் செய்தியாளர்கள் கேட்டபோது தேர்தல் ஆணையம் தமிழகவெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கி உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது எளிமையாக உள்ள இந்த சின்னத்தை பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யும் நோக்கில் இன்று கடை கடையாக வீடு வீடாக சென்று நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் ஆங்காங்கே கட்சியினர் பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என கூறினார் தேர்தல் கூட்டணியை பொருத்தவரை திமுக மற்றும் அதிமுகவினர் ஒரு முடிவான நிலைக்கு வந்துவிட்ட நிலையில் ஓபிஎஸ் தேமுதிக மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் நீங்கள் யாரிடம் கூட்டணி வைப்பீர்கள் என செய்தியாளர்கள் கேட்டபோது நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம் பொறுத்திருந்து பாருங்கள் தலைவர் மக்களிடம் கூட்டணி வைத்து அதிக இடங்களை பிடித்து ஆட்சியைப் பிடிப்பார் எனக்கு கூறினார் மேலும் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் பெண் விவகாரம் தொடர்பாக கட்சியிலிருந்துநீக்கப்பட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அன்னதானம் வழங்குகிற நிகழ்ச்சியில் எல்லாம் தனது புகைப்படத்தை மாவட்ட செயலாளராக போட்டு செய்கிறாரே என கேட்டபோது தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என கூறினார்.
Next Story


