சீராப்பள்ளி பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா எம்பி பங்கேற்பு..

X
Rasipuram King 24x7 |23 Jan 2026 9:20 PM ISTசீராப்பள்ளி பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா எம்பி பங்கேற்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சீராப்பள்ளி பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 18.50.லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதை இன்று வெள்ளிக்கிழமை ராஜேஷ்குமார் எம்பி ரிப்பன் வெட்டி கல்வெட்டு திறப்பு விழா செய்து பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து குழந்தைகள் பொதுமக்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய எம்பி ராஜேஷ்குமார் தமிழக அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறது. மேலும் குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்க 854 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சனை என்பது இல்லாதவாறு இன்று அனைத்து பகுதிகளிலும் குடிநீர் அனைவருக்கும் கிடைத்து வருகிறது. மேலும் தற்போது சோதனையோட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் இது அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். அது மட்டும் இல்லாமல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் மகளிருக்கு இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத் தொகை, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் இன்னும் பல திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறார் என புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் பேரூர் செயலாளர் செல்வராஜ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..
Next Story
