குளித்தலையில் முன்னாள் டிஎஸ்பி ராசன் எழுதிய நூல் வெளியீட்டு விழா

உயிரும் உதிரமும் உனக்காக நூல் வெளியீட்டு விழா
கரூர் மாவட்டம் குளித்தலை அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் தமிழ் பற்றாளன் முன்னாள் துணை காவல் கண்காணிப்பாளர் ராசன் எழுதிய உயிரும் உதிரமும் உனக்காக நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது தமிழ் பேரவை தலைவர் கடவூர் மணிமாறன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அறிவு கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். நான் இப்போது தமிழ் பேரவை அமைச்சர் முனைவர் கிராமியம் நாராயணன், சுப.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை முன்னாள் கூடுதல் காவல் துறை இயக்குனர் கி.துக்கையாண்டி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு நூல் வெளியீடு செய்தார். இதை ஈரோடு முன்னாள் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜி.கே.பாரதி முதல் நூலைப் பெற்று வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.
Next Story