ராசிபுரம் அருகே புதிய பேருந்து வழிடத்தை கொடியசைத்து துவக்கி வைத்த எம்பி ராஜேஷ்குமார்: மூதாட்டி ஒருவர் எம்பி யை விஜியகாந்த் பாடலை பாடி வாழ்த்தினார்...

ராசிபுரம் அருகே புதிய பேருந்து வழிடத்தை கொடியசைத்து துவக்கி வைத்த எம்பி ராஜேஷ்குமார்: மூதாட்டி ஒருவர்  எம்பி யை விஜியகாந்த் பாடலை  பாடி வாழ்த்தினார்...
X
ராசிபுரம் அருகே புதிய பேருந்து வழிடத்தை கொடியசைத்து துவக்கி வைத்த எம்பி ராஜேஷ்குமார்: மூதாட்டி ஒருவர் எம்பி யை விஜியகாந்த் பாடலை பாடி வாழ்த்தினார்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள வேலம்பாளையம், மற்றும் பூசாரிபாளையம் உள்ளிட்டபகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் யிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வேலம்பாளையம் பகுதியிலிருந்து காகாவேரி , ராசிபுரம் ,வழியாக ஆட்டையாம்பட்டி செல்வும் அதே போல் பூசாரிபாளையத்திலிருந்து மலையாம்பட்டி ராசிபுரம் வழியாக சேலம் செல்ல அரசு பேருந்து சனிக்கிழமை இயக்கபட்டது. இதனை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்பி கலந்து கொண்டு அரசு பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அரசின் சாதனை திட்டங்களை எடுத்து கூறினார். அப்போது வேலம்பாளையம் பகுதியில் ஒரு மூதாட்டி ஒருவர் விஜயகாந்த் நடித்த பொன்மனச் செல்வன் படத்தின் வரும் நீ பொட்டு வைத்த தங்க குடம் , நீ மணிமகுடம், தங்க கட்டி என் தங்ககுட்டி? என விஜியகாந்த் பாடலை பாடி வரவேற்று உற்சாகத்தை ஏற்படுத்தினார். என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்ச்சியில் அட்மா குழு தலைவர் ஒன்றிய கழகச் செயலாளர் கே‌.பி. ஜெகநாதன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் முத்துச்செல்வன், வேலம்பாளையம் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ஓ.சுந்தரம், போக்குவரத்துறை அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..
Next Story