கடவூர் பகுதிகளில் நடந்த தை மாத பிரதோச நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

X
Krishnarayapuram King 24x7 |24 Jan 2026 8:28 PM ISTசுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம்,கடவூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் தைமாத பிரதோச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கடவூர் வட்டம் தொண்டமாங்கிணம் கிராமத்தில் உள்ள பலமை வாய்ந்த ஆதிசுயம்பீஸ்வரர் கோவிலில் தைமமாத பிரதோச வழிபாடுகள் நடந்தது. முன்னதாக ஆதிசுயம்பீஸ்வரர் முன்பாக உள்ள நந்தீஸ்வருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, மஞ்சள், கரும்புசாறு உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிசேகம் செய்து வழிபட்டனர் பின்னர் கோவில் முன்பாக சிறு யாக குண்டம் அமைக்கப்பட்டு பல்வேறு வகையான பூஜைகள் செய்தனர். இதில் உலக அமைதி வேண்டுதல், குழந்தைகள் வரம், தொழில்கள் சிறக்கவேண்டும், பருவ மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டுதல் உள்பட பல்வேறு சிறப்பு யாகம் நடத்தி ஆதிசுயம்பீஸ்வரரை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொண்டமாங்கிணம் கிராமத்தில் உள்ள பலமை வாய்ந்த ஆதிசுயம்பீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பிரதோச வழிபாடு நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த பிரதோசம் நிகழ்ச்சிகளில் சுற்று வட்டாத்தில் இருந்து திரலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகள் செய்தனர்.
Next Story
