ஆதார் திருத்தத்தற்திற்கு ராணுவ ஆவணங்களை சான்றாக ஏற்க வேண்டும். ராணுவ வீரர்கள் கோரிக்கை.

X
Arani King 24x7 |25 Jan 2026 8:26 PM ISTகண்ணமங்கலம் முப்படை வீரர்கள் நலச்சங்க அலுவலகத்தில் சங்க தலைவர் கேப்டன் லோகநாதன் குடியரசு தின விழா அழைப்பிதழை அனைவருக்கும் வழங்கினார்
ஆரணி, கண்ணமங்கலம் முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க அலுவலகத்தில் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க ஆலோசகர் சகாதேவன் தலைமை தாங்கினார். பொருளாளர் கேப்டன் கருணா, துணைத்தலைவர் பழனி முன்னிலை வகித்தனர். செயலாளர் ரவி வரவேற்றார். சங்க தலைவர் கேப்டன் லோகநாதன் சங்க தீர்மானங்கள் குறித்து பேசினார். அப்போது, வரும் 26ம் தேதி குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, ஆதார் திருத்தத்திற்கு ராணுவ பதிவேடுகளில் உள்ள ஆவணங்களை சான்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என ராணுவ வீரர்களின் கோரிக்கையை நடைமுறைபடுத்த வேண்டி உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிவித்தார். பின்னர் குடியரசு தின விழா அழைப்பிதழை அனைவருக்கும் வழங்கினார். முடிவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சந்தியா நன்றி கூறினார். முன்னாள் ராணுவ வீரர்களின் வீரர்கள் இறந்தபின், மூத்த வீரத்தாய்மார்களுக்கு பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ் இல்லாத காரணத்தால், ஆதார் கார்டுகளில் உள்ள பிழைகளை திருத்த முடியவில்லை. இதனால் பென்ஷன் வாங்க முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே ராணுவ ஆவணத்தில் உள்ள பிறந்த தேதியை சான்றாக ஏற்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
