ஆரணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலம்

X
Arani King 24x7 |25 Jan 2026 8:28 PM ISTதிருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஜெ.பொன்னையன் நியமனம் செய்யப்பட்டதை முன்னிட்டு ஆரணி காமராஜர்சிலை அருகிலிருந்து காந்திசிலை வரை ஊர்வலம் சென்றனர்.
ஆரணி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஜெ.பொன்னையன் நியமனம் செய்யப்பட்டதை முன்னிட்டு ஆரணி காமராஜர்சிலை அருகிலிருந்து காந்திசிலை வரை ஊர்வலம் சென்றனர். திருவண்ணாமல வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஆரணியைச் சேர்ந்த ஜெ.பொன்னையன் நியமனம் செய்யப்பட்டார். இதன் காரணமாக ஆரணி காமராஜர் சிலை அருகிலிருந்து புதிய மாவட்டதலைவர் ஜெ.பொன்னையன் தலைமையில் கட்சியினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டு காந்திசிலை வரை சென்று காந்தி சிலைக்கு மாலை ்அணிவித்தனர். இதில் மாநில பொதுச்செயலாளர் எம்.வசுந்தராஜ், முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு, முன்னாள் மாவட்டதலைவர் வி.பி.அண்ணாமலை, மாவட்ட நிர்வாகிகள் டாகட்ர் வாசுதேவன், அசோக்குமார், பி.கே.ஜி.பாபு, எஸ்.டி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் உதயக்குமார் அனைவரையும் வரவேற்றார். மேலும் வட்டார தலைவர்கள் அம்மாபாளையம் இளங்கோவன், மருசூர் இளங்கோவன், இதில் நகர நிர்வாகி பிள்ளையார்சம்பந்தம், செய்யார் நிர்வாகிகள் மகேஷ், ராஜவேலு, போளூர் நிர்வாகி ரவி,செவன் ஸ்டார் ராஜா, பிலாசூர் குமார், காமராஜ், மார்கண்டேயன், இளைஞர் காங்கிர் கட்சி நிர்வாகி கோகுல்ராஜ், வந்தவாசி ஜெகன், மறையூர் ஒன்றிய நிர்வாகி பெருமாள், தெள்ளார் துளசிதரன், செய்யார் நிர்வாகிகள் செல்வம், பச்சையப்பன், ஞானசேகரன், பார்த்திபன், தேசூர் காமராஜ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story
