திருச்செங்கோடு ரதவீதிகளில் புதைவிட மின்கம்பி அமைத்து மின்னூட்டம் வழங்கும் விழா திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பங்கேற்பு

X
Tiruchengode King 24x7 |25 Jan 2026 9:04 PM ISTதிருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் விசாகத் தேர் திருவிழா தைப்பூசத் தேர் திருவிழா அம்மன் தேரோட்டம்ஆகிய நிகழ்ச்சிகளின் போது ரத வீதிகளில்மின் கம்பிகளைஅகற்றுவதால் வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதை களையும் வகையில் அமைக்கப்பட்ட புதைவிட மின்கம்பிகளில் மின்னூட்டம் வழங்கும் விழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்வைகாசி விசாகத் தேரோட்டம் அம்மன் தேரோட்டம் தைப்பூச தேரோட்டம் ஆகிய திருவிழாக்கள் நடக்கும்போது நான்கு ரக வீதிகளில் மின் கம்பிகளை அகற்றி மீண்டும் இணைப்பு கொடுத்து செய்ய வேண்டிய இருப்பதால் நான்கு அது வீதிகளிலும் உள்ள வியாபாரிகள் கடை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் இதற்கு மாற்று ஏற்பாடு ஏதாவது செய்து தர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந்தனர்.இதனை ஒட்டி நான்கு ரத வீதிகளிலும் புதைவிட மின்பாதைஅமைக்கும் பணி நடைபெற்றது முதல் கட்டமாககிழக்கு மற்றும் வடக்கு ரக வீதியில் புதைவிட மின் பாதை அமைக்கப்பட்டது இரண்டாம் கட்டமாக தெற்கு மற்றும் மேற்கு ரத வீதிகளில் உள்ள தாழ் வளர்த்த மின்பாதைகளை அகற்றி புதை விட மின்பாதைகள் அமைக்கும் பணியை ரூபாய் 95 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் கடந்த 24.11.2025 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்ஈஸ்வரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். தற்போது தெற்கு மற்றும் மேற்கு தொடர் வீதிகளில் உள்ள மின்பாதைகளை அகற்றிவிட்டு புதைவிட மின்பாதைகள் அமைக்கும் பணி அனைத்தும் நிறைவு பெற்றவேலையில் புதைவட மின்பாதை மின்னூட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு மின்னோட்டத்தை தொடங்கி வைத்தனர். இது குறித்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாது திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டம் ஆண்டு தோறும் வைகாசி மாசம் நடைபெறும் போது சாலையின் குறுக்கே உள்ள கம்பிகள் ஒயர்களால் இடையூறு ஏற்பட்டது தற்காலிகமாக மின்சாரத்தை நிறுத்திவிட்டு தேரோட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய போது புதைவட கம்பிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். இதனை ஏற்று முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து முதல் கட்டமாக வடக்கு ரத வீதியிலும் கிழக்கு ரக வீதியிலும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு இரண்டாம் கட்டமாக மேற்கு ரதவீதி மற்றும் தெற்கு ரத வீதிகளில் பணிகள் நிறைவு பெற்று இன்று மின்னூட்டம் கொடுக்கப் பட்டுள்ளது இதற்கு உதவி புரிந்த தமிழக முதல்வருக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன் மேலும் விரைவாக பணிகளை முடித்த திருச்செங்கோடு மின்வாரியத்திற்கும் நகராட்சிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு கரூர் மண்டல மின் பகிர்மான தலைமை பொறியாளர் கலைச்செல்வி, நாமக்கல் மிக மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் சபாநாயகம், திருச்செங்கோடு கோட்ட பொறியாளர் சுந்தர்ராஜன், திருச்செங்கோடு வடக்கு உதவி பொறியாளர் சீனிவாசன், தெற்கு உதவி செய்ய பொறியாளர் யோகநாதன், எலச்சிபாளையம் உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், மல்லசமுத்திரம் உதவி செயற்பொறியாளர் அமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் திருத்தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு ரத வீதிகளில் உள்ள உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளானது புதைவட மின் பாதையாக மாற்றும் பணியானது தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக கடந்த 1. 8. 2024 அன்று ஒரு கோடியே 95 லட்சத்து 91 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டு 14.11. 2024 அன்று நிறைவு பெற்றது. அதன் மூலம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக மேற்கு ரத வீதி தெற்கு ரத வீதி பகுதிகளில் புதைவட கம்பிகள் பொருத்தி அதற்கு மின்னூட்டம் வழங்கும் நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுள்ளது. இதனால் தேரோட்டம் நடைபெறும் போது மின்சார தடங்கல் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
