நிறைவேற்ற முடிந்த திட்டங்களை மட்டுமே எடப்பாடியார் வாக்குறுதியாக தந்துள்ளார் அதிமுக மாணவரணி சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் தங்கமணி பேச்சு
Tiruchengode King 24x7 |26 Jan 2026 12:06 AM ISTஅதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் இலவச பேருந்துபயணம்திட்டம் நடைமுறைக்கு வரும்,வீடில்லாத அனைவருக்கும் வீடு,மகளிருக்கு 2 ஆயிரம் வழங்கப்படும், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும்அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்தங்கமணி பேச்சு
இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த தியாகிகள் நினைவாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாமக்கல் மாவட்ட அஇஅதிமுக மாணவரணி சார்பில்ஏமப்பள்ளியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் என். பொன்னுசாமி தலைமை வகித்தார்.தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன் அனைவரையும் வரவேற்றார், முன்னாள் அமைச்சர் சரோஜா, பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் சேகர், திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொதுக்குழு உறுப்பினர் பொன் சரஸ்வதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்ட செயலாளர்,குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசியபோது எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த உடன் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் வழங்கப்படும்,100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் வீடு இல்லாத அனைவரும் வீடு பெரும் வகையில் அரசே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா ஆட்சி காலத்தில் இருந்து திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 25,000 மானியத்துடன் கூடிய ஸ்கூட்டி வழங்கும் திட்டம் 5 லட்சம் பேருக்கு உயர்த்தி வழங்கப்படும்.நிறைவேற்ற முடிந்த திட்டங்களை மட்டுமே எடப்பாடி யார் வாக்குறுதிகளாக தந்துள்ளார் மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கே வழங்குகிறோமே தவிர இதில் இலவசம் என்பது எதுவும் இல்லை.மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எடப்பாடியார் அரசு அனைத்து திட்டங்களையும் வகுத்து செயல்படும் எனக் கூறினார் கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சந்திரசேகர், மாணவர் அணி துணை செயலாளர் பழனி, இளம் பேச்சாளர் சேலம் மாலதி, தலைமைக் கழக பேச்சாளர் காவேரி ஆனந்த் வர்த்தக அணி செயலாளர் ராகாதமிழ்மணிஆகியோர் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள், அம்மா பேரவை நிர்வாகிகள்மகளிர் அணியினர் இளைஞர் இளம்பெண்கள் பாசறையினர் எனசுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
Next Story


