சிந்தாமணிபட்டியில் குப்பை கிடங்கால் பாதிப்பு

X
Krishnarayapuram King 24x7 |26 Jan 2026 4:24 PM ISTதமிழக வாழ்வுரிமைக் கட்சி புகார்
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சிந்தாமணிபட்டி - தரகம்பட்டி சாலையில் வண்ணாம் மடை சறுக்கு பாலம் அருகே குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதில் மேலப்பகுதி, மாவத்தூர், கீழப் பகுதி கிராமப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையே காய்கறி கழிவுகள், குப்பை மற்றும் கோழி இறைச்சி கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த குப்பை கிடங்கை சுற்றி அதிக அளவில் தெரு நாய்களும் சுற்றி வருகின்றன. இந்த தெரு நாய்கள் குப்பை கிடங்கு அமைந்துள்ள சாலை வழியாக செல்லும் மனிதர்களையும் ஆடு, மாடு போன்ற விலங்குகளையும் கடித்து வருகின்றன. நாய்கள் இரு சக்கர வாகனங்களில் குறுக்கே வந்து விழுவதால் பலரும் கீழே விழுந்து காயமடைந்தும் வருகின்றனர். குப்பை கிடங்கில் இருந்து அதிக துர்நாற்றம் வீசுவதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதி உள்ள குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி கடவூர் ஒன்றிய செயலாளர் மருதை தலைமையில், மாவட்ட அமைப்பாளர் ரவி, தொழில் சங்க மாநில துணை தலைவர் நடராஜன் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சங்கர், கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய தலைவர் முனியப்பன் மற்றும் கட்சியினர் கடவூர் ஒன்றிய ஆணையரிடம் நேரில் புகார் மனு அளித்தனர்.
Next Story
