வள்ளிபுரம் தொட்டிப்பட்டி ஸ்ரீ மொச்சகொட்டை பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்.
NAMAKKAL KING 24X7 B |26 Jan 2026 7:35 PM ISTநாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் தொட்டிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மொச்சகொட்டை பெருமாள் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா மிகுந்த பக்தி மற்றும் கோலாகலத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, காவிரி ஆற்றங்கரையிலிருந்து தீர்த்தக் குடங்கள் எடுத்து வரப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் வள்ளிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, ஸ்ரீ மொச்சகொட்டை பெருமாளை தரிசனம் செய்து அருள் பெற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம், சிறப்பு பூஜைகள் மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Next Story



