அரசு பஸ் பயணிகளை சாலை நடுவில் இறக்கி விடுவதால் போக்குவரத்து இடையூறு
Komarapalayam King 24x7 |26 Jan 2026 8:28 PM ISTகுமாரபாளையத்தில் அரசு பஸ் பயணிகளை சாலை நடுவில் இறக்கி விடுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது
குமாரபாளையத்தில் அரசு பஸ் பயணிகளை சாலை நடுவில் இறக்கி விடுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. குமாரபாளையம் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் பவர் ஹவுஸ், ராஜம் தியேட்டர், சரவணா தியேட்டர், ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு, காலனி மருத்துவமனை, கே.ஓ.என். தியேட்டர், கவுரி தியேட்டர் ஆகியன பஸ் ஸ்டாப்கள் உள்ளன. இந்த நிறுத்தங்களில் அரசு பஸ்கள் சாலையின் நடுவில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால், பயணிகளும் அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டியுள்ளது. மேலும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு, ஏராளமான வாகனங்கள், அரசு பஸ் பின்னால் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. சாலையை கடக்கும் பயணிகள் மீது டூவீலர்கள் மோதி விபத்து ஏற்படும் நிலையும் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் பஸ் எதுவாக இருந்தாலும் சாலை ஓரமாக வந்துதான் பயணிகளை இறக்கி விடவும், ஏற்றியும் செல்ல வேண்டும் என அறிவுறுத்த வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் அருகே, சாலை மிக குறுகியதாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த இடத்தில் வேகத்தடை அமைத்து போக்கவரத்து சீராக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story


