குடியரசு தின கிராம சபா கூட்டம்

குடியரசு தின கிராம சபா கூட்டம்
X
குமாரபாளையம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகங்கள் சார்பில் கிராம சபா கூட்டம் நடந்தது.
குடியரசு தினத்தையொட்டி குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், பல்லக்காபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகங்கள் சார்பில் கிராம சபா கூட்டம் நடந்தது. குப்பண்டபாளையம் ஊராட்சி சார்பில் நடந்த கிராமசபா கூட்டத்தில் பி.டி.ஓ. அலுவலக உதவி அலுவலர் சுந்தரம் தலைமை வகித்தார். இதில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று, வடிகால் வசதி, குப்பைகள் அகற்ற வேண்டும், சாலை வசதி பராமரிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்த மனுக்கள் வழங்கினர். இதில் ஊராட்சி செயலர் வினோத், வி.ஏ.ஓ. முருகன், மக்கள் நீதி மய்யம் மண்டல செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி செயலர் சித்ரா, காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலர் சதீஷ், நகர காங்கிரஸ் தலைவர் ஜானகிராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story