ராமநாதபுரம் குடியரசு தின விழா
Ramanathapuram King 24x7 |27 Jan 2026 6:53 AM ISTதமிழ்நாடு சிறப்பு காவல் படை பன்னிரண்டாம் அணியினர் குடியரசு தின விழாவை கொடியேற்றி விமர்சையாக கொண்டாடினர்.
ராமநாதபுரம் மாவட்டம்தமிழ்நாடு சிறப்பு காவல் படை பன்னிரண்டாம் அணியினர் குடியரசு தின விழாவை கொடியேற்றி விமர்சையாக கொண்டாடினர். நாட்டின் 77 வது குடியரசு தின விழா இந்தியா முழுவதும் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலைய கட்டிடங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சக்கரகோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பனிரெண்டாம் அணியை சேர்ந்த காவலர்கள் இன்று அந்த வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி குடியரசு தின விழாவை விமர்சையாக கொண்டாடினர். குடியரசு தின விழாவை ஒட்டி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12 ஆம் அணி வளாகத்தில் இருந்த தேசிய கொடியினை கமாண்டன்ட் முருகேசன் ஏற்றி வைத்தார் இந்நிகழ்வில் துணை ஆணையர் ஜெயந்தி, உதவி ஆணையர் ஈஸ்வர பிரசாத், ஆய்வாளர் சலீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு காவல் படை 12 அணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் வழங்கினர்.
Next Story



