அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவியர்களுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது

அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவியர்களுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது
X
Dindigul
திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் அறிவுறுத்தலின் பேரில் தெற்கு காவல் நிலையம் சார்பாக சார்பு ஆய்வாளர் முனியம்மாள் தலைமையில் இந்நிகழ்வில் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் பள்ளி மாணவியர்களுக்கு போதை பழக்கத்தால், பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. போதை பொருள் விற்பனையை தடுக்க, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவம், உயர்கல்வி மற்றும் காவல்துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்து விளக்கினார். மேலும், போதை பொருள் பயன்பாட்டை தடுக்க, தங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து, போக்சோ சட்டம் தொடர்பாக விளக்கம் அளித்ததுடன், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்பவர்கள் மீது போலீசில் புகார் செய்யலாம் என அறிவுரைகள் வழங்கினார்.
Next Story