திருச்செங்கோடு மேற்கு நகர தமிழக வெற்றி கழகத்தில் சலசலப்பு பெண் நிர்வாகிகளை மேற்கு நகர செயலாளர் இப்ராஹிம் திட்டமிட்டு ஒதுக்குவதாக பரபரப்பு புகார்.

திருச்செங்கோடு மேற்கு நகர தமிழக வெற்றி கழகத்தில் சலசலப்பு பெண் நிர்வாகிகளை மேற்கு நகர செயலாளர் இப்ராஹிம் திட்டமிட்டு ஒதுக்குவதாக பரபரப்பு புகார்.
X
திருச்செங்கோடு மேற்கு நகர தமிழக வெற்றி கழகத்தில் சலசலப்பு பெண் நிர்வாகிகளை மேற்கு நகர செயலாளர் இப்ராஹிம் திட்டமிட்டு ஒதுக்குவதாக பரபரப்பு புகார். தமிழக வெற்றி கழக கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை.என பெண் நிர்வாகிகள் பேட்டி
திருச்செங்கோடு நகர தமிழக வெற்றி கழகம் நிர்வாக வசதிக்காக கிழக்கு நகரம் மேற்கு நகரம் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதாகவும் கட்சி வேலைகளுக்கு சென்றால் கூட மதிப்பதில்லை எனவும் மேற்கு நகரச் செயலாளர் இப்ராஹிம் திட்டமிட்டு தங்களை ஒதுக்குவதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் எனவும் தளபதியின் வெற்றிக்கும் புகழுக்கும் கலங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அமைதி காத்து வந்த நாங்கள் இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்கிற நிலையில் செய்தியாளர்களை சந்திப்பதாகவும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரதிப் பிரியா, மேற்கு நகர துணை செயலாளர் தேவிப்பிரியா, நாமக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்திராதேவி, நகர செயற்குழு உறுப்பினர் விஜய் ஆகியோர் பரபரப்பு பேட்டிஅளித்தனர்.திருச்செங்கோடு நகராட்சி 18 வது வார்டு ராஜா கவுண்டம்பாளையம் தெரு எண் 3 பகுதியைச் சேர்ந்தவர் ரதிப் பிரியா 35, இவர் தமிழக வெற்றி கழகத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். ராஜா கவுண்டம்பாளையம் பங்களா தெரு பகுதியை சேர்ந்தவர் தேவிப்பிரியா 26, ஒன்பதாவது வார்டு வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா தேவி தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த இவர் நாமக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். நகர செயற்குழு உறுப்பினராக இருப்பவர் விஜய் 30 இவர்கள் அனைவரும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது. முதலில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரதி பிரியா கூறியதாவது நான் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக ஆவதற்கு முன்பே விஜயின் தீவிர ரசிகையாக இருந்து கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறேன். கட்சியின் அனைத்து வேலைகளிலும் மும்முரமாக பணியாற்றியுள்ளேன். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளேன். சமீப காலமாகஎன்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை தகவல் சொல்வதில்லை தகவல் தெரிந்து சென்றாலும் மதிப்பதில்லை. சமீபத்தில் நடந்த பொங்கல் கோலப் போட்டி நிகழ்ச்சியில் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை கொடுத்து, கேலண்டர் கொடுத்து அனைவரையும் கோலப்போட்டியில் கலந்து கொள்ளச் செய்தேன். ஆனால் எனது பகுதியில் மட்டும் பரிசளிப்பு விழா நடத்தப் படவில்லை. அக்கம் பக்கத்து பகுதிகளில் பரிசுகள் வழங்கப்பட்டு இருப்பதை பார்த்த பெண்கள் ஏன் எங்களை புறக்கணிக்கிறீர்கள் என எங்களிடம் வாக்குவாதம் செய்கிறார்கள். திருச்செங்கோடு மேற்கு நகர செயலாளராக உள்ள இப்ராஹிம் எங்களை திட்டமிட்டு புறக்கணிக்கிறார்.சூரியம்பாளையம் பகுதியைவேண்டுமென்றே புறக்கணிக்கிறார் வார்டுக்கு தொடர்பில்லாதவர்களை அழைத்து வந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடத்துகிறார்.ஏன் எனக் கேட்டால் தொலைபேசியில் பேச மறுக்கிறார். குறுஞ்செய்திகளுக்கும் பதில் அளிப்பதில்லை.இதுபோல் ஏற்கனவே பல நிகழ்வுகள் நடந்துள்ளது இது குறித்து எங்களது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் அவர்களிடம் புகார் தெரிவித்தோம் இணைந்து செயல்படுங்கள் என அவர் அறிவுறுத்திய போதிலும் இப்ராஹிம் கண்டு கொள்வதில்லை நாங்கள் விஜயின் வெற்றிக்காகவும் விஜய்க்காக மட்டுமே கட்சியில் இருக்கிறோம் நாங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப் படுவதற்கான காரணம் தெரியவில்லை. நேற்று நடந்த கிரிக்கெட் போட்டிக்கு கூட எங்களுக்கு தகவல் சொல்லவில்லை. அங்கு நடந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப் பட்ட டீசர்ட்டில் தளபதியின் படம் சிறிதாக இருப்பது எங்கள் மனதை உறுத்தியது. இது குறித்து யாரிடம் கேட்பது என தெரியவில்லை. எனக் கூறினார் தொடர்ந்து பேசிய மேற்கு நகர துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் தேவிப்பிரியா கூறியதாவது மேற்கு நகர செயலாளராக உள்ள இப்ராஹிம் எங்களை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை தகவல் சொல்வதில்லை குரூப்பில் போடும் தகவல் தெரிந்து போனாலும் சரிவர மதித்து நடப்பதில்லை எங்களுடன் மற்றவர்கள் பேசுவதை தடுக்கிறார் என்ன காரணம் என தெரியவில்லை வார்டு செயலாளருக்கும் அவருக்கும் ஏதோ உள்கட்சி பூசல் இருப்பதாக தெரிய வருகிறது இதனால் எங்களை புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம் நாங்கள் தளபதிக்காகவும் தளபதியினுடைய ரசிகர்களாக இருந்து இந்த கட்சிக்கு வந்தவர்கள் எங்களை புறக்கணிப்பதில் எந்த நியாயமும் இல்லை ஏன் புறக்கணிக்கிறார் என தெரியவில்லை இது குறித்து அருண்ராஜ் அண்ணனிடம் தகவல் தெரிவித்தோம் ஆனால் அவர் அறிவுறுத்தியும் கூட இப்ராஹிம் எங்களை இணைத்து செயல்படுவதில்லை என கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாவட்டத் துணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சந்திராதேவி என்பவர் பேசும்போது என்னை வேண்டுமென்றே கட்சிப் பணிகளில் புறக்கணிக்கிறார்கள் தகவல் தெரிந்தோ குறுஞ்செய்தி மூலம் தகவல் அறிந்தோ நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் என்னை ஓரம்கட்டும் நடவடிக்கையில் இப்ராஹிம் ஈடுபடுகிறார். நான் ஒரு அருந்ததிய பெண் என்பதால் என்னை ஜாதி ரீதியாக புறக்கணிக்கிறாரோ என்கிற தாழ்வுணர்ச்சி எனக்கு ஏற்படுகிறது. இது தொடர்பாக கட்சியின் மேல் இடத்தில் புகார் தெரிவித்தோம் எந்த நடவடிக்கையும் இல்லை. நாங்கள் இப்பொழுதும் எந்த பதவிக்காக ஆசைப்பட்டோ மற்ற பொறுப்புகளுக்காகவோ கட்சியில் இல்லை தலைவர் விஜயின் வெற்றி, தலைவர் விஜயின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே நாங்கள் இந்த கட்சியில் செயல்படுகிறோம் என கண்ணில் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை கொள்கையாக அறிவித்து சமூகநீதியை கடைப்பிடிப்போம் என கூறும் தமிழக வெற்றிக் கழகத்தில்ஜாதியால் புறக்கணிக்கப் படுகிறோமோ என மாவட்ட நிர்வாகியாக உள்ள அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தஒரு பெண்கண்ணீர் மல்க பேசுவது நெஞ்சை உருக்குவதாக இருந்தது பேட்டி எடுத்தபோது கூட தமிழக வெற்றி கழகத்திற்கும் தளபதி விஜய்க்கும் இதனால் எந்த களங்கமும் ஏற்பட்டு விடக்கூடாது உள்கட்சி பிரச்சனையில் இப்ராஹிம் போன்றவர்கள் செய்வதால் தலைமைக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என அவர்கள் ஆதங்கப்பட்டதை காண முடிந்தது. திருச்செங்கோடு வேட்பாளர் என கருதப்படும் அருண்ராஜ் இது போன்ற பிரச்சனைகளை உடனடியாக தலையிட்டு சுமூக நிலைக்கு கொண்டு வராவிட்டால் தேர்தல் நேரத்தில் மாற்று விளைவுகளை உருவாக்கும் என கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர். வெளியில் வந்து சொன்னவர்கள் இவர்கள் என்றாலும் இதுபோல் சூரியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இப்ராஹிம் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் பலரும் இருப்பதாக கூறப்படுகிறது.
Next Story