திண்டுக்கல்லில் செய்தியாளர் சந்திப்பில்

திண்டுக்கல்லில் செய்தியாளர் சந்திப்பில்
X
Dindigul
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளது. தற்பொழுது விருப்பஓய்வு MBBS மருத்துவர்களுக்கும், ஒரு சில ஸ்பெஷாலிட்டி பிரிவுகளில் பணி புரியும் மருத்துவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது. விருப்ப ஓய்வு என்பது ஒருவரின் அடிப்படை உரிமையாகும் ஆகையால் அனைத்து ஸ்பெஷாலிட்டி பிரிவுகளிலும் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் விருப்ப ஓய்வு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வைக்கிறது. கோரிக்கைகளை ஏற்காவிட்டால் 2-2-2026 அன்று தமிழ்நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றும் இதன் பிறகு சுமூக முடிவு ஏற்படாவிட்டால் 6-2-2026 அன்று 2 மணி நேரம் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என மாவட்டத் தலைவர் டாக்டர் சீனிவாசன் மாவட்டச் செயலாளர் டாக்டர் நாகராஜ் மாவட்ட பொருளாளர் திருலோக சந்திரன் தெரிவித்தனர்
Next Story