கரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா தமிழில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்.
Karur King 24x7 |28 Jan 2026 12:54 PM ISTகரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா தமிழில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்.
கரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா தமிழில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம். தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தாந்தோன்றி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நீதிமன்ற உத்தரவுப்படி தமிழில் மந்திரம் ஓதி வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் புனித நீர் கலசத்தினை சிவாச்சாரியார் மேள தாளங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வளம் வந்த பிறகு கோபுர கலசத்தை வந்தடைந்தது. பின்னர் கலசத்திற்கு சந்தன பொட்டிட்டு வண்ண மாலைகள் அணிவித்த பின்னர் புனித நீரை கும்பத்தில் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் எம்பி ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல், அறநிலை துறை அதிகாரிகள், பக்தர்கள், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷே விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு சிறப்பு பேருந்துகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்டது. மேலும் மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு போலீசார் பேரிக்காடுகள் அமைத்து பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.
Next Story






