நாமக்கல்லை முன்னேறிய மாவட்டமாக்க தொழிற்புரட்சி மற்றும் விவசாயப் புரட்சிகளை ஏற்படுத்துவேன் காங்கிரஸின் புதிய மாவட்டத் தலைவர் டாக்டர் செந்தில் சூளுரை.

தமிழகத்தில் நாமக்கல்லை முன்னேறிய மாவட்டமாக்க தொழிற்புரட்சி மற்றும் விவசாயப் புரட்சி ஏற்படுத்துவேன் என்று நாமக்கல் கிழக்கு மாவட்ட‌ காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பதவி ஏற்றுள்ள டாக்டர் பி.வி.‌ செந்தில் சூளுரைத்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட‌த்தின் புதிய காங்கிரஸ் தலைவராக டாக்டர் பி.வி. செந்தில் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதிய தலைவராக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்டத் தலைவர் பி.ஏ. சித்திக் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் ஏற்புரை வழங்கிய டாக்டர் செந்தில் பேசுகையில்,நமது நாமக்கல் மாவட்டமானது திருச்செங்கோட்டில் உள்ள பண்டைய அர்த்தநாரீஸ்வரர் முதல் நாமக்கல் குடைவரைக் கோயில் மற்றும் கொல்லிமலை கொண்டை ஊசி வளைவுகள் வரை - பெருமைமிக்க பல அடையாளங்களாக தாங்கி நிற்கிறது. ஆனால் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சமூக வளர்ச்சியில் சற்று பின்தங்கியுள்ளது.கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக, இந்த தருணத்தில் நான் உங்களுக்கு ஒரு உறுதியை அளிக்கிறேன். இந்த உறுதியானது - இந்திய தேசிய காங்கிரஸின் மூவர்ணக் கொடியின் கீழ் எஃக்கைப் போன்று உருவாக்கப்பட்ட ஒரு போர்த் திட்டம். அவை - விவசாயப் புரட்சி மற்றும் தொழிற்புரட்சி.காவிரி -திருமணி முத்தாறு - சரபங்கா நதிகளை இணைக்க நாம் கடுமையாக போராட வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டுவதற்கு தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் நமது கூட்டணி அரசின் ஒத்துழைப்புடன் எடுப்போம். பாசனக் கால்வாய்களை மீட்டெடுப்போம்.அதுபோல நமது காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் 1950களில் வேலைவாய்ப்புக்காக காங்கிரஸ் பேரியக்கத்தின் துணைத் தலைவராகவும், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினருமாக திகழ்ந்த காலஞ்சென்ற ஐயா டி.எம். காளியண்ணன் அவர்களால் சங்ககிரியில் சிமெண்ட் ஆலை, பள்ளிபாளையத்தில் காகித தொழிற்சாலை, மோகனூரில் சர்க்கரை ஆலை அமைக்கப்பட்டது.அதற்குப் பிறகு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தரும் வகையில் வேறு எந்த தொழிற்சாலையும் துவக்கப்படவில்லை.‌ ராசிபுரம் ஜவுளி, திருச்செங்கோடு நூற்பாலைகளில் மத்திய அரசின் முதலாளித்துவ கொள்கைகளால் ஏராளமான இளைஞர்கள் தங்களது வேலையை இழந்து வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் வேலை செய்து வருகின்றனர்.இனி இளைஞர் வெளியேற்றம் இருக்கக் கூடாது.நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய தொழில்களான கோழித் தொழில் மற்றும் லாரித் தொழிலுக்கு தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும்.நமது இதய நாயகன் ராகுல் காந்தியின் நியாயத்திற்கான தெளிவான அழைப்பு இங்கே எதிரொலிக்க வேண்டும்.நாமக்கல் மாவட்டமானது, தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு வழங்கும் மாவட்டமாக இருக்கும்படி நமது போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் இனி இருக்கப் போகிறது.இவ்விரண்டு புரட்சிகளும் இந்த மாவட்டத்தில் வெற்றி பெறும் வரை என்னுடைய போராட்டம் ஓயாது. இவை தவிர, நமது கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நாமக்கல், இராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ளஒவ்வொரு சாலையையும் நமது கூட்டணியின் தலைமை வகிக்கும் முதல்வர் திரு. முக. ஸ்டாலின் மற்றும் இம்மண்ணின் மைந்தர்கள் - ராஜ்யசபா எம்.பி.,யும் நாமக்கல் கிழக்கு மாவட்ட‌ திமுக செயலாளருமான அண்ணன் திரு. கே ஆர் என் இராஜேஸ் குமார், தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் மதிவேந்தன் மற்றும் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய VS மாதேஸ்வரன் ஆகியோருக்கு தகுந்த முறையில் அழுத்தம் கொடுத்து அமைக்கவும்! தொழில்நுட்ப ஆய்வகங்களுடன் பள்ளிகளை நவீனப்படுத்தவும்! கிராமங்களை மின்மயமாக்கவும், சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தவும் எனது தலைமையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.உரையின் துவக்கத்திலேயே, நாமக்கல் மண்ணின் முதல் சுதந்திரப் போராட்ட தியாகி நாகராஜ அய்யங்கார் அவர்களது தியாகங்களை போற்றும் வகையில் இந்த மண்ணில் உள்ள ஒவ்வொரு தியாகிகளையும் அடையாளம் கண்டு அவர்களை கவுரவப்படுத்தும் நடவடிக்கைகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட‌ காங்கிரஸ் மேற்கொள்ளும்.‌ அவர்களது தன்னலமற்ற தியாகங்களும், சேவைகளும் இம்மண்ணில் இனி போற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.நாம் முன்பு ஆங்கிலேயர்களை எதிர்கொண்டு அவர்களை நசுக்கியுள்ளோம். அதுபோல தற்போது பாரதிய ஜனதா கட்சி என்ற தீய சக்திக்கு எதிராக புரட்சியைத் துவக்கியுள்ளோம்.இந்தப் புரட்சியானது மென்மையானது அல்ல - இது காந்தியின் சத்தியாக்கிரகம், நேருவின் தொலைநோக்கு பார்வை, சோனியா காந்தி அம்மையாரின் கருணை மற்றும் ராகுல் காந்தி ஜியின் அச்சமற்ற அணிவகுப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட ஒரு புரட்சி!இந்தப் புரட்சிக்கு, ​​என்னுடைய தலைமையில், ​​நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரசில் எவ்விதமான பங்களிப்பை அளிக்க முடியுமோ, அதை நாம் அளித்து நாம் வெற்றி பெறுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக புதிய மாவட்டத் தலைவர் டாக்டர் செந்தில் அவர்களுக்கு கிழக்கு மாவட்ட‌ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து முதலைப்பட்டி பைபாஸ் சாலையில் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர்கள் 100க்கும் மேற்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நகர் முழுவதும் ஊர்வலமாக புதிய தலைவரை அழைத்து வந்தனர். பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேரு ஜி மற்றும் இந்திரா காந்தி அம்மையாரின் சிலைகளுக்கும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தனது ஏற்புரையைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட 800க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தடபுடலாக சைவ மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியில், நடிகர் விஜய் கட்சியில் இருந்து விலகி 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில் டாக்டர் செந்தில் முன்பாக இணைந்து கொண்டனர்.இந்நிலையில் மொடக்குறிச்சி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.‌பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துரையை வழங்கினர்.


Next Story