திருச்செங்கோடு வழியாக தைப்பூசத்தை ஒட்டி பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு தவெக சார்பில் குடிநீர் உணவு வழங்கிய தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ்

திருச்செங்கோட்டில் இருந்தும் திருச்செங்கோடு வழியாகவும் தைப்பூசத்தை ஒட்டி பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு தவெக சார்பில் குடிநீர் உணவு போன்றவற்றை தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வழங்கினார்
தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர் பெரும்பாலும் கொங்கு மண்டல மக்கள் பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கமான ஒன்று, கொரோன காலகட்டத்திற்கு பிறகு வழக்கத்தை விட இந்த ஆண்டு பாதயாத்திரை செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது, திருச்செங்கோட்டில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் அவரது சொந்த ஊரான திருச்செங்கோடு தொகுதியில் நிற்பது ஏறக்குறைய உறுதியான நிலையில் அவர் இங்கு தங்கி பல்வேறு கட்டங்களாக தேர்தல் பணிகளை செய்து வருகிறார் அந்த வகையில் இன்றுதிருச்செங்கோட்டில் இருந்தும் திருச்செங்கோடு வழியாகவும் தைப்பூசத்தை ஒட்டி பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு தவெக சார்பில் குடிநீர் உணவு போன்றவற்றை தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் முருக பக்தர்களுக்கு வழங்கினார் அப்போது காவடி எடுத்து வந்த பக்தர்களிடம் இருந்த காவடியை வாங்கி அவரும் ஒரு காவடி ஆட்டம் ஆடி முருக பக்தர்களிடம் நூதன பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
Next Story