பி.ஜி.பி பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

X
Namakkal King 24x7 |29 Jan 2026 8:24 AM ISTபி.ஜி.பி குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி பேசுகையில் தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியையும் சவால்களையும் எதிர்கொள்வதற்கான திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்திட முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு அளிக்க வேண்டும் என்றார்.
பரமத்தி அருகே உள்ள பி.ஜி.பி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.பி.ஜி.பி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர்.வி.கவிதா அனைவரையும் வரவேற்று பேசினார், தொடர்ந்து பி ஜி பி குழுமத்தின் முதன்மையர் முனைவர். கே. பெரியசாமி மற்றும் தாளாளர்.எம். கணபதி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.நிகழ்ச்சியின் தலைமை உரையை பி.ஜி.பி குழுமத்தின் துணைத் தலைவர் விசாலாட்சி பெரியசாமி மற்றும் பி.ஜி.பி குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி ஆகியோர், தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியையும் சவால்களையும் எதிர்கொள்வதற்கான திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்திட முன்னாள் மாணவர்கள் பங்களிப்பை வலியுறுத்தி பேசினர் . கல்லூரியின் கல்வித்தரம், உட்கட்டமைப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்க்கான பங்களிப்பை மேற்கொண்ட முன்னாள் மாணவர்கள் மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.பின்னர் நடைபெற்ற கலைந்துரையாடலில், முன்னாள் மாணவர்கள் குழுத்தலைவரும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக பொறியாளருமான ஆனந்த் குமார் உரையாற்றினார். முன்னாள் மாணவர்கள் தங்களது கல்வி அனுபவங்கள், தொழில்துறை பயணங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வி மற்றும் திறன் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டனர்.பிற்பகலில் முன்னாள் மாணவர்கள் கல்லூரி வளாகத்தை பார்வையிட்டு, எதிர்கால கல்வி, ஆராய்ச்சி மற்றும் பழைய மாணவர் சங்க செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கல்லூரி–முன்னாள் மாணவர் உறவுகளை மேலும் வலுப்படுத்தி, எதிர்கால கல்வி மற்றும் தொழில்துறை இணைப்புகளுக்கான புதிய பாதையை உருவாக்கும் வகையில் மிகுந்த வெற்றியுடன் நடைபெற்றது. இயந்திரவியல் துறைத் தலைவர் முனைவர். எஸ். செல்வி நன்றி கூறினார்.
Next Story
