பள்ளியின் ஆண்டறிக்கை வில்லுப்பாட்டாக வாசித்த பள்ளி மாணவ மாணவிகள்திருச்செங்கோடு பள்ளி ஆண்டு விழாவில் புதுமை

பள்ளியின் ஆண்டறிக்கை வில்லுப்பாட்டாக வாசித்த பள்ளி மாணவ மாணவிகள்திருச்செங்கோடு பள்ளி ஆண்டு விழாவில் புதுமை
X
திருச்செங்கோடு புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியின் 38வது ஆண்டு விழாவில் ஆண்டறிக்கையை வில்லுப்பாட்டாக பாடி அசத்திய மாணவிகள் சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு
திருச்செங்கோடு புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியின் 38வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குபள்ளியின் தாளாளர் கிறிஸ்துராஜா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் எட்வர்ட் தத்தேயுஸ் அனைவரையும் வரவேற்றார். முதன்மை விருந்தினர்களாகதிருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை விருந்தினராக பிஆர் டி குழுமங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன்,சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன், முன்னாள்நகர் மன்ற உறுப்பினர் நகர திமுக துணைச் செயலாளர் ராஜவேல், நகர மன்ற உறுப்பினர் ராஜா, பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ஜான் ஜோசப், மறை மாவட்ட முதன்மை குரு கிளமெண்ட்,ஆகியோர் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தொழில் அதிபர் ராஜா சிங் பரிசுகள் வழங்கினார். பள்ளியின் ஆண்டறிக்கையைவழக்கமாக வாசிப்பது போல் இல்லாமல் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியாக நடத்திக் காட்டியமாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி புதுமையாக இருந்தது. வரவேற்பு நடனம் அனைவரையும் கவர்வதாக இருந்தது. தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மாணவ மாணவிகளின் உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story