தை மாத வளர்பிறை பிரதோஷம் சிவன் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபாடு!

தை மாத வளர்பிறை பிரதோஷம்  சிவன் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபாடு!
X
நமச்சிவாயா என முழக்கமிட்டபடி பக்தர்கள் நந்தியையும் சிவனையும் வழிபட்டனர்.வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்கு விபூதி, சந்தனம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தை மாத பிரதோஷ விழாவையொட்டி அனைத்து சிவன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்தீஸ்வரருக்கும் சிவபெருமானுக்கும் பல்வேறு மலர்களால் மாலைகள் அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. “நமச்சிவாயா” என முழக்கமிட்டபடி பக்தர்கள் நந்தியையும் சிவனையும் வழிபட்டனர்.வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்கு விபூதி, சந்தனம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.நாமக்கல் தட்டார தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், முத்துக்காப்பட்டி காசிவிசுவநாதர் கோயில், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story