பத்திரிக்கையாளர் பாதுகாப்பு தனி சட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும். கரூரில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் பேட்டி.

பத்திரிக்கையாளர் பாதுகாப்பு தனி சட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும். கரூரில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் பேட்டி.
பத்திரிக்கையாளர் பாதுகாப்பு தனி சட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும். கரூரில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் பேட்டி. கரூர் மாவட்டம் குளித்தலை அய்யர்மலை பகுதியில் செயல்படும் எம்எல்ஏ பழனியாண்டி செயல்படுத்தி வரும் கல்குவாரியில் நடைபெற்று வரும் முறைகேடு தொடர்பாக நேற்று மதியம் செய்து சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் அவருடன் சென்ற சென்ற வழக்கறிஞர் ஆகியோரை தாக்கிய சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இது தொடர்பாக செய்தியாளர் மற்றும் குவாரி உரிமையாளர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் இரு தரப்பினர் மீதும் குளித்தலை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று கரூரில் பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ் அணியின் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் சமீபகாலமாக செய்தியாளர்கள் தாக்கப்படுவது கண்டனத்துக்குரியது. இதே போல கரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கரூர் கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் என்பவர் பொதுவெளியில் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசி நடந்து கொண்டார். இப்போது நேற்று திமுக எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு எதிராக அராஜக செயலில் ஈடுபட்டுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது தொடர்ந்து இதுபோன்று செய்தியாளர்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்கு தமிழக அரசு உடனடியாக செய்தியாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை வருகின்ற சட்டப் பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Next Story