செய்யாறில் திமுக ஆட்சிக்கு உங்க வீட்டு பில்லே சாட்சி என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
Arani King 24x7 |1 Feb 2026 1:05 PM ISTசெய்யாறு நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிமுக சார்பில் திமுக ஆட்சிக்கு உங்க வீட்டு பில்லே சாட்சி என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் தவமணி ஏற்பாட்டில் நடைபெற்றது
ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிமுக சார்பில் திமுக ஆட்சிக்கு உங்க வீட்டு பில்லே சாட்சி என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் தவமணி ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மற்றும் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று ஐந்தாண்டு விடியாத திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால் பொதுமக்கள் எவ்வாறு சிரமப்படுகிறார்கள் மேலும் திமுக ஆட்சியில் அவலங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் வெங்கடேசன் நகர அவைத் தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய செயலாளர்கள் எம்.மகேந்திரன், அரங்கநாதன், சி.துரை, சிவராஜ்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அருணகிரி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் அருண், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் இளையராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பாராசூர் பெருமாள், அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் கன்னியப்பன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைச் செயலாளர் சுரேஷ், மற்றும் தணிகாசலம் , எழில், பாலாஜி, நிவாஸ், தூசி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெற்றிச்செல்வன், கோட நகர் வெங்கடேஷ்,ராஜி , சக்தி உள்ளிட்ட பல கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
