பள்ளிபாளையத்தில் ஜெ.குரு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

X
Pallipalayam King 24x7 |1 Feb 2026 5:44 PM ISTவன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு அவர்கள் பிறந்தநாள் விழா பள்ளிபாளையம் நால் ரோடு பகுதியில் பாமக சார்பில் கொண்டாடப்பட்டது
பாட்டாளி மக்கள் கட்சி நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் வன்னியர் சங்கத்தின் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த மாவீரன் ஜெ.குரு அவருடைய 65 ஆவது அகவை தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வன்னியர் சங்க நகர செயலாளர் சின்னதுரை வரவேற்புரையாற்றினார்.பாமக மாவட்ட செயலாளர் கே.உமாசங்கர் தலைமை தாங்கினார்.மாவட்டத் தலைவர் எம்.முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ஆர்.சி.முருகேசன்,மாவட்ட துணை செயலாளர் கராத்தே என்.சேகர் மாவட்ட மகளிர் அணி சரோஜா செந்தில்நாதன், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நகரத் தலைவர் மெக்கானிக் ராஜா, காளிதாஸ், பாம்பே முருகன், ஆலாம்பாளையம் நாகராஜ், ஜெகதீஷ் ,அர்ஜுனன் ,ஜெயச்சந்திரன் ராஜேந்திரன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . நிறைவாக வன்னியர் சங்க நகர தலைவர் வெங்கடேஷ் நன்றி உரையாற்றினார்.
Next Story
