திருச்செங்கோட்டில் தைப்பூச தேரோட்டம் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, ஆகியோர் வடம் பிடித்தனர்

திருச்செங்கோட்டில் தைப்பூச தேரோட்டம் எம்எல்ஏ ஈஸ்வரன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் சின்னதுரை, அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்
இந்து சமய அறநிலைத்துறை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலின் உப கோயில்களான அருள்மிகு கைலாசநாதர் சுவாமி அருள்மிகு ஆறுமுகசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 24.01.26 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் திரு விழாவின் ஒன்பதாம் நாள் விழாவாக ஆறுமுக சுவாமி திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு,அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து,அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் எம். சின்னதுரை,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு அறங்காவலர்கள் பிரபாகரன் அர்த்தனாரி சித்ரா வண்ண கண்ணன் பச்சியப்பன் தேர் திருவிழா குழு தலைவர் முத்து கணபதி சின்ன மாரியம்மன் கோவில் விழா குழுதலைவர் ஊர் பிரமுகர் ராஜா, கொத்துக்காரர் அன்பரசன், முன்ன மதியம் 3 மணிக்கு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். முன்னதாக ஆறுமுக சாமி கோவிலில் இருந்து வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகப் பெருமான் கைலாசநாதர் கோவிலுக்கு எழுந்தருளினார். அங்கிருந்து அருள்மிகு சோமஸ்கந்தர் சுகந்த குந்தலாம்பிகை சண்டிகேஸ்வரர் சூலத் தேவர் ஆகிய சுவாமிகளுடன் திருத்தேருக்கு எழுந்தருளி னார்.தொடர்ந்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்த திருத்தேர் நிலை சேர்ந்தது. இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு சோமாஸ்கந்தர் சுகந்த குந்தலாம்பிகை சண்டிகேஸ்வரர் சூலத்தேவர் ஆகிய சுவாமிகள் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சிநடக்க உள்ளது தொடர்ந்து வண்டி கால் உற்சவம் நடராஜர் தரிசனம் நடக்க உள்ளது. நாளை விழாவின் இறுதி நிகழ்வாக பத்தாம் நாள் திருவிழா நடக்க உள்ளது மதியம் 12 மணிக்கு மேல் 2 மணிக்குள் ஈரோடு ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தீர்த்த வாரி உற்சவம் நடக்க உள்ளது.தைப்பூசதேர்வலம் வரும்போது வழிநெடுகிலும் பக்தர்கள் அன்னதானம் செய்தனர் நீர் மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்கினர்.
Next Story