கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா- முதியோர் இல்லத்தில் அன்னதானம், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
Karur King 24x7 |2 Feb 2026 1:15 PM ISTகரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா- முதியோர் இல்லத்தில் அன்னதானம், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா- முதியோர் இல்லத்தில் அன்னதானம், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம். தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மூன்றாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சதீஸ் குமார் தலைமையில் கரூரை அடுத்த மணல்மேடு பகுதியில் அமைந்துள்ள ஐயப்பா சேவா சங்கம் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான முதியோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தொடர்ந்து, சீத்தப்பட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சி துவங்கி மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சியை நிர்வாகிகள் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story



