முருகன் கோவில்கள் சார்பில் தைப்பூச சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் முருகன் கோவில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு நடந்தது.
குமாரபாளையம் முருகன் கோவில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு நடந்தது. தைப்பூசம் நாளையொட்டி குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. . தேவாங்கர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் கோவில், வட்டமலை முருகன் கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம் முருகன் கோயில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கள்ளிபாளையம் முருகன் கோவில், கே.ஓ.என். தியேட்டர் அருகே உள்ள மருதமலை முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story