தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர் !

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர் !
X
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு வெற்றி கொண்டாட்டம் தவெக மாவட்ட துணைச் செயலாளர் கே.எம்.டி. அறிவு தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி வளையபட்டியில் உள்ள குன்னிமரத்தான் ஆலயத்தில் தவெக சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.தவெக மாவட்ட துணைச் செயலாளர் கே.எம்.டி. அறிவு தலைமையில் நடைபெற்ற தலைவர் விஜய் பெயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகி கே.ஆர்.கார்த்தி முன்னிலையில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடினர், பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள், கட்சியின் சின்னமான விசில் மற்றும் பிரச்சார துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் அன்னதானமும் வழங்கப்பட்டது.விழாவில் பேசிய நிர்வாகிகள்,
தலைவர் விஜய்யின் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் மக்கள் நல்ல அரசியலை முன்னெடுத்து வருவதாகவும், சேந்தமங்கலம் தொகுதியில் கட்சியின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவோம் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தவெக மோகனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், மற்றும் இணை செயலாளர் விஜயகுமார்,மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணேராதா, எருமப்பட்டி தெற்கு ஒன்றிய செயளாலர் பாஸ்கர் ,எருமப்பட்டி பேரூர் இணை செயலாளர் கிருஷ்ணன்,ஐடி விங் பிரிவு ரத்தினம், மோகனூர் வடக்கு ஒன்றிய பொருளாளர் பார்த்திப்பன்,துணைச் செயலார் கீர்த்தனா,இளைஞரணி செயலாளர் லோகநாதன்,மோகனூர் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் சக்திவேல், பழனிசாமி, தினேஷ்குமார், எருமப்பட்டி மேற்கு ஒன்றிய மகளிரணி சீத்தாலட்சுமி மற்றும் சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story