ஆரணியில் பாஜக தகவல்தொழில்நுட்ப பிரிவு சார்பில் பயிலரங்கம். ஐ.டி விங் மாநில செயலாளர் சாய்பாபா பங்கேற்பு.

ஆரணி சட்டமன்றத் தொகுதியில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு பயிலரங்கம் நடைபெற்றதில் ஐ.டி விங் மாநிலசெயலாலர் சாய்பாபா கலந்துகொண்டு பயிற்சி அளித்தார்
ஆரணி, ஆரணி சட்டமன்றத் தொகுதியில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு பயிலரங்கம் நடைபெற்றதில் ஐ.டி விங் மாநிலசெயலாலர் சாய்பாபா கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். முதற்கட்டமாக, தொகுதியிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்கும் நடைமுறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தகவல்தொழில்நுட்ப திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் டி.ராஜேஷ் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் சாய்பாபா கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் மத்திய அரசின் 2026 பட்ஜெட்டின் சிறப்பம்சங்களையும், தமிழகத்திற்கு ஒதுக்கிய வளர்ச்சி திட்டங்களையும் மக்களிடையே சேர்ப்பது குறித்தும் பேசினார். மேலும், ஐ.டி மாவட்ட துணை தலைவர் ஹரிஹரன், மாவட்ட செயலாளர்கள் கவுசல்யா, சரத்பாபு, மண்டல் நிர்வாகி நந்தா, சிறுபான்மை பிரிவு நிர்வாகி தங்கராஜ், ஓபிசி அணி நிர்வாகி சீனிவாசன், முன்னாள் ஐ.டி விங் ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதுடன், மாவட்டம் முழுவதும் ஐடி விங் மாநாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகிகள் முன்வைத்தனர்.
Next Story