ஆரணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தாலிக்கயிறுகளுடன் ஆர்ப்பாட்டம்.

X
Arani King 24x7 |4 Feb 2026 11:09 PM ISTஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தாலிக்கயிறுகளுடன் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தாலிக்கயிறுகளுடன் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர். திமுக அரசு கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவித் திட்டங்களை நிறுத்தியதை கண்டித்தும், விவசாயிகளின் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ்அறிவித்ததை தள்ளுபடி செய்யாமல் இருப்பதை கண்டித்தும் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் தாலிக்கயிறுகளுடன் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் இதில் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டதலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மேலும் இதில் அக்ராபாளையம் செந்தில், பூபாலன், வடுகசாத்து தணிகைமலை, தாமோதரன் உள்ளிட்ட பல விவசாயிகள் கலந்துகொண்டனர். .
Next Story
