கிருஷ்ணராயபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் போராட்டம்

X
Krishnarayapuram King 24x7 |5 Feb 2026 1:48 PM ISTகோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் உள்ள கரூர் மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் தலைமையில் திருப்பூர் ராயபுரத்தில் மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வாகனம் மூலம் 30 விவசாயிகள் புறப்பட்டு சென்றனர். திருப்பூர் புறப்படுவதற்கு முன்பாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது, உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சாமி நாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விளை பொருட்களுக்கு விலை வழங்க வேண்டும். அரசே அனைத்து விளைப் பொருட்களையும் கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு மத்திய சட்டம் நிறைவேற்றவேண்டும். கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு சுமார் 14 லட்சம் கோடியை வாரா கடன் என்று அறிவித்து தள்ளுபடி செய்த ஒன்றிய அரசு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும். விவசாயிகள் போராடி பெற்ற இலவச மின்சார திட்டத்தையும், குடிசைகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தையும், வீடுகளுக்கும் 100 யூனிட்டுகள் வரை இலவச மாக வழங்கப்படும் மின்சாரத்தையும், சிறுகுறு தொழில்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மின்சார சலுகைகளையும் முற்றிலுமாக பறித்திடும் மின்சார திருத்த மசோதா 2025ஐ ஒன்றிய அரசே உடனடியாக திரும்ப பெற வேண்டும். உற்பத்தி செய்து, விவசாயிகளிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிக்க வழிவகை செய்கிற, இந்தியாவின் பாரம்பயமான விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகள், பெரும் நிறுவனங்கள் விதையை முழுமையாக அழித்து ஒழிக்க வகை செய்கிற விதை மசோதா 2025ஐ பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் பயிர் பாதிப்புகள் ஏற்படுகிற போது, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான பயிர் காப்பீடு திட்டத்தை கார்ப்பரேட்டுகளும், பெரும் நிறுவனங்களும் லாபம் ஈட்ட அனுமதிக்காமல் ஒன்றிய, மாநில அரசுகளே பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை ரத்து செய்து, சிதைத்து விக்சித் பாரத் -ஜி - ராம் ஜி என்ற முழக்கங்களை எழுப்பி திட்டத்தை கொண்டு வந்துள்ளதை ஒன்றிய அரசே திரும்பப்பெற வேண்டும். வனஉரிமைச் சட்டம் 2006ஐ அமல்படுத்த வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்திட நடவடிக்கையை எடுத்திட வேண்டும். இழப்பீட்டை அதிகப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி புறப்பட்டுச் சென்றனர்
Next Story
