இராஜேந்திரம் கிராமத்தில் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி

X
Kulithalai King 24x7 |5 Feb 2026 8:55 PM ISTநாய் கடித்து ஆட்டுக்குட்டி இறப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இராஜேந்திரம் கிராமத்தில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, அக்ரகாரம், ரைஸ் மில் தெரு, காளியம்மன் கோவில் தெரு பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. கடந்த சில நாட்களில் நாய் கடித்து அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மேலும் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சிவா என்பவருக்கு சொந்தமான 5 மாத ஆட்டுக்குட்டி கழுத்தை நாய் கடித்து குதறியதில் பலியானது. இதேபோல 2 நாட்கள் முன்னர் நாய் கடித்ததில் ஆடு ஒன்று இறந்து போய் உள்ளது. இராஜேந்திரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Next Story
