நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபரகணங்களை வழங்கிய எம்.எல்.ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன்.

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபரகணங்களை வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவினை தொடங்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபரகணங்களை வழங்கும் விழாவில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன் தலைமையில், மேயர் மேயர் து.கலாநிதி முன்னிலையில் 639 எண்ணிக்கையிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியோடு விளையாட்டு துறையிலும் இளைஞர்கள் சாதனைபுரிய வேண்டுமென்று இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியினால் தமிழ்நாடு பிற மாநிலங்களை காட்டிலும் விளையாட்டு துறையில் உலகளவில் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகிறது. இதன் மூலம் அனைவருக்கும் ஒரு ஊக்கம் வருகிறது. நாமும் சாதனை புரிய வேண்டும் என்ற உந்துதல் இளைஞர் மத்தியில் உருவாகிறது. அந்த வகையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் 20.10.2024 அன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 707 ஊராட்சிகளுக்கு முதற்கட்டமாக டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட், கையுந்துப் பந்து, எறிபந்து, கால்பந்து, டென்னிக்காய்ட், ஸ்கிப்பிங், கேரம், சிலம்பம், செஸ், கபாடி, இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு தேவையான உபகரணங்கள், உடற்பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் டி ஷர்ட், விசில், கோன்ஸ், தொப்பி ஆகியவை அடங்கிய 33 உபகரணங்களின் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவினை தொடங்கி வைத்துள்ளார்கள். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மாநகராட்சி, பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு, இராசிபுரம் நகராட்சிகள், ஆலம்பாளையம், அத்தனூர், எருமபட்டி, கே.என்.பட்டி, மல்லசமுத்திரம், மோகனூர், படவீடு, நாமகிரிபேட்டை, பாண்டமங்கலம், பரமத்தி, பட்டணம், பிள்ளாநல்லூர, போத்தனூர், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, சேந்தமங்கலம், வேலூர், வெங்கரை, வெண்ணந்தூர் ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட 447 வார்டுகளில் 639 எண்ணிக்கையில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபரகணங்கள் வழங்கப்படுகிறது. இதில் மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு 3 தொகுப்பும், நகராட்சியில் ஒரு வார்டுக்கு 2 தொகுப்பும், பேரூராட்சியில் தலா ஒரு தொகுப்பும் வழங்கப்படும். நீங்கள் அனைவரும் உடல் அளவிலும், மனதளவிலும் தொய்வடையாமல் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.கோகிலா உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story