கோடங்கிப்பட்டியில் மகா கும்பாபிஷேக விழா

பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா தீபாரதனை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கோடங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள அன்னை மஹாசக்தி ஸ்ரீ பாப்பாத்தி அம்மன், ஸ்ரீ நாகம்மாள், ஸ்ரீ ரெங்கம்மாள், மற்றும் அருள்மிகு முருகன், அருள்மிகு பாலகுருநாதர், ஸ்ரீ சந்தன கருப்புசாமி, ஸ்ரீ சங்கிலி கருப்புசாமி ஆகிய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தல்லபின்னிவார் குல பங்காளிகள், மாமன் மைத்துனர்கள், குடிபாட்டுக்காரர்கள், பொதுமக்கள், சாமியாடிகள் என பலரும் கலந்துகொண்டு மஹா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story