குளித்தலையில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த டீ மாஸ்டர் கைது
Kulithalai King 24x7 |7 Feb 2026 9:30 PM ISTகுளித்தலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா வீரப்பூர் அடுத்த சடையம்பட்டியை சேர்ந்தவர் அஜித் என்கிற நல்லாண்டவர் அனுமந்தன் (வயது 26). இவர் வாழ்வார்மங்கலத்தில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். சிறுமி புகாரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து வாலிபரை இன்று கைது செய்தனர்
Next Story


