பஞ்சப்பட்டி ஏரியில் உலக ஈரநில தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
Kulithalai King 24x7 |8 Feb 2026 6:03 PM ISTமுன்னாள் குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
கரூர் மாவட்டம் குளித்தலை விதைகள் அறக்கட்டளை, அம்பேத்கர் கல்வி இயக்கம் மற்றும் Aasanya Foundation சார்பில் உலக ஈரநில தினம்-2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி என அழைக்கப்படும் பஞ்சப்பட்டி ஏரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு முன்னாள் குளித்தலை ஒன்றிய குழு தலைவர் டி.டி விஜய விநாயகம் கலந்துகொண்டு கொடி அசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். முன்னதாக டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலை மாணவ மாணவியர்கள் ஏரியில் மரக்கன்றுகள் நடுதல், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு இயற்கை நிலங்கள், ஈர நிலங்கள், நீர் நிலைகளை குப்பைகள் இல்லாமல் பாதுகாப்போம் என்று கோஷங்களை முழக்கமிட்டவாறு அனைவரும் ஏரியில் பேரணியாக சென்றனர். நீர் வெளியேறும் பாதை வரை சென்று பேரணியை முடித்தனர். இந்நிகழ்வில் விதைகள் அறக்கட்டளை நிறுவன சந்துரு, ஜெயந்தி, பிரபு, அம்பேத்கர் இரவு பாடசாலை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மாரியப்பன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
