அக்ராபாளையம் கிராமத்தில் உள்ஷள ஸ்ரீ தர்மராஜா கோயிலில் கும்பாபிஷேக விழா.

ஆரணி அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத ஸ்ரீ தர்மராஜா பரிவர்த்தன மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்
ஆரணி அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத ஸ்ரீ தர்மராஜா பரிவர்த்தன மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக ஆலயத்தில் முன்பு யாகசாலை அமைத்து புண்ணிய நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கலசத்தில் ஊற்றி யாகசாலையில் வைத்து சிறப்பு கால பூஜைகள் நடைபெற்றன. வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை, நித்திய ஆராதனம், அஷ்டபந்தன பூஜை, விஷேச திருவாராதனம், மஹாசாந்தி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை பட்டாச்சாரியார்கள் மேல வாத்தியம் முழங்க கொண்டு சென்று கோவில் உச்சியில் உள்ள கோபுர கலசத்தின் மீது ஊற்றி மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ் இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். உடன் அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய நிர்வாகிகள் ஆறுமுகம், பழனி மற்றும் திமுக தொகுதி பொறுப்பாளர் அன்பழகன், பாமக கட்சியைச் சேர்ந்த அ.கருணாகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக புனித நீரை மக்கள் மீது தெளிக்கப்பட்டன பின்னர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன. இந்த விழாவில் சுற்றியுள்ள பகுதியிலிருந்து திரளான பொதுமக்கள் பக்தர்கள் என கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story