குளித்தலை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் துவக்க விழா

நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம் விரிவாக்கம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக குளித்தலை நகராட்சியில் காலை உணவு திட்டத்தை நகர் மன்ற தலைவர் சகுந்தலா தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நகர் மன்ற துணைத் தலைவர் கணேசன், திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் சாகுல் ஹமீது, நகர துணை செயலாளர் செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் விபி சேகர், ஆனந்த செல்வி, ராணி , மஞ்சுளா, சரோஜா மற்றும் நகராட்சி அதிகாரிகள், அலுவலகப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்
Next Story