அரசு கலைக்கல்லூரியில் தற்காலிக பேராசிரியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டம் துவக்கம்

அரசு கலைக்கல்லூரியில் தற்காலிக பேராசிரியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டம் துவக்கம்
X
குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் தற்காலிக பேராசிரியர்கள் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டம் துவக்கினர்.
குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் தற்காலிக பேராசிரியர்கள் காலவரையற்ற பணி நிரந்தரம் கோரி பணி புறக்கணிப்பு போராட்டம் துவக்கினர். இது பற்றி அவர்கள் கூறியதாவது: குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆண்கள் 15, பெண்கள் 16, என மொத்தம் 31 பேராசிரியர்கள் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் எங்களுக்கு பணி நிரந்தரம் என்று கூறி ஏமாற்றி விட்டார்கள். ஒரே கல்வித்தகுதி உள்ள எங்களுக்கு மாதம் 25 ஆயிரம் மட்டும் தான் சம்பளம். ஆனால் நிரந்தர ஆசிரியர்களுக்கு ஒரு லட்சம் மேல் வாங்கி வருகிறார்கள். எங்களுக்கு எந்த அரசு சலுகை கிடையாது. பிரசவ விடுப்பு உள்ளிட்ட எதுவும் கிடையாது. இதுபோல் மாநிலம் முழுதும் 8 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். அனைத்து அரசு கல்லூரிகள் எங்களால்தான் செயல்பட்டு வருகிறது. எங்கள் மாநில தலைவர் செந்தில்குமார் வழிகாட்டுதல்படி இன்று முதல் காலவரையற்ற பணி புறக்கணிப்பினை துவக்கி உள்ளோம். இவ்வாறு கூறினார்கள். முன்னதாக கல்லூரி வாசலில் நின்று கோரிக்கைகள் வலியுறித்து கோஷங்கள் எழுப்பினர்.,
Next Story