ராசிபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்..

X
Rasipuram King 24x7 |9 Feb 2026 8:59 PM ISTராசிபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 198 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது அனைத்து மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி போன்ற பகுதியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்து இந்த திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி ராசிபுரம் நகராட்சி சார்பில் அரிமா திருமண மண்டபத்தில் நகர் மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர் அவர்கள் தொடங்கி வைத்து 198 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி சிறப்பித்தார். இதில் நகராட்சி ஆணையாளர் நிவேதிதா, துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் , நகராட்சி அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
