லாடவரம் கிராமத்தில் புதிய கலையரங்கம் அமைக்க பூமி பூஜை.

X
Arani King 24x7 |10 Feb 2026 9:51 AM ISTஆரணி அடுத்த லாடவரம் கிராமத்தில் புதிய கலையரங்கம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டார்.
ஆரணி அடுத்த லாடவரம் கிராமத்தில் புதிய கலையரங்கம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த லாடவரம் ஊராட்சியில் புதியதாக கலையரங்கம் அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூபாய் 7.5 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக நாடகமேடை அமைப்பதற்காக பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாசம், நகர செயலாளர் அசோக்குமார், மாவட்ட பிரதிநிதி தீனதயாளன், கிளைக் கழகச் செயலாளர்கள் ஜி.போஸ், எல்லைக்காரன், ஒன்றிய அம்மா பேரவை நிர்வாகி பூபாலன், ஏ.நரசிம்மன் உள்பட நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
