பரமத்தி வேலூர் பகுதியில் மிரட்டல் வீடியோ பரவியதால் போலீசார் விசாரணை.

X
Paramathi Velur King 24x7 |10 Feb 2026 6:52 PM ISTபரமத்தி வேலூர் அருகே மாணவிகள், பெண்களுக்கு மிரட்டல் வீடியோ பரவியதால் போலீசார் விசாரணை.
பரமத்திவேலுார், பிப்.10: பரமத்தி வேலுார் அருகே பொத்தனூரை சேர்ந்தவர் நீலகண்டன்(50). இவர் கரூர் மாவட்ட ஹைவே போலீசில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ந் தேதி இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது பொத்தனூர் பஸ் நிறுத்தம் 4 சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பேக்கரியில் இளைஞர்கள் கும்பலாக அமர்ந்திருந்தனர். இதை பார்த்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் பேக்கரியில் விசாரணை நடத்தினார். இதுதொடர்பான வீடியோ வைரலானது. இதனால் நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிக்க பரமத்திவேலுார் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதாவுக்கு உத்தரவிட்டார். இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
