ராசிபுரம் அருகே நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பை அகற்றிய காவல்துறையினர். கிராம மக்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் பரபரப்பு..

X
Rasipuram King 24x7 |10 Feb 2026 8:11 PM ISTராசிபுரம் அருகே நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பை அகற்றிய காவல்துறையினர். கிராம மக்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் பரபரப்பு..
ராசிபுரம் அருகே நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பை அகற்றிய காவல்துறையினர். ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களை கைது செய்த போலீசார்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கார்கூடல்பட்டி பகுதியில் மாரியம்மன் கோவில் ஆனது அமைந்துள்ளது. இக்கோயிலை சுற்றி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பொதுவழி பாதையை மறைத்து கோவிலை சுற்றி வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. வேலி அமைக்கப்பட்டதால் ராஜ்குமார் வனிதா குடும்பத்தினர் தோட்டத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பாதையை மீட்டு தரக்கோரி கடந்த 2022 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கானது நடைபெற்று வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு கோவிலை சுற்றி அமைக்கப்பட்ட கேட் மற்றும் வேலியை அகற்றி பாதையை சரி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலின் கேட் மற்றும் வேலியை அகற்ற வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்றனர். இதனால் கிராம மக்கள் மாரியம்மன் கோவில் சுற்றியுள்ள வேலியை அகற்ற க்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களை டிஎஸ்பி விஜயகுமார் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை அடுத்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் கிராம மக்களை கைது செய்ததால் அங்கிருந்த பொதுமக்கள் கடுமையான வார்த்தைகளால் வசைப்பாடி சாபமிட்டனர். பின்னர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கேட் மற்றும் கம்பி வேலிகளை அகற்றினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story
