கழிவுநீர் விடும் பிரச்சனையால் நான்கு பேர் தாக்கியதில் கூலித் தொழிலாளி பலி

X
Komarapalayam King 24x7 |10 Feb 2026 8:40 PM ISTகுமாரபாளையத்தில் கழிவுநீர் விடும் பிரச்சனையால் நான்கு பேர் தாக்கியதில் கூலித் தொழிலாளி பலியானார்.
குமாரபாளையம் சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் சூசைபாலன், 49. விசைத்தறி கூலி. இவருக்கும், அருகில் வசிக்கும் பிரான்சிஸ் பாஸ்கர், என்பவருக்கும் கழிவுநீர் விடுவது சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 11:30 ,மணியளவில், சூசைபாலன் வீட்டின் முன்பு, பிரான்சிஸ் பாஸ்கர் வீட்டு கழிவுநீர் சென்றதால், சூசைபாலன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரான்சிஸ் பாஸ்கர், அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர்கள் அலோசியஸ்ராஜ், மனோஜ்குமார், மணிகண்டன் ஆகியோர் சூசைபாலனை கைகளாலும், கட்டையலும், கற்களாலும் பலமாக தாக்கியதில் சூசைபாலன் படுகாயமடைந்தார், இவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, கேட்ட போது, இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்து விட்டார் என கூறியுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று, நான்கு பேரை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.சூசைபாலன் தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இவரை விட்டு பல வருடம் முன்பு தனியாக சென்றதால், சூசைபாலன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
Next Story
