காவிரி படுகை குழுவினரின் வரலாற்று பயணம்.

X
Komarapalayam King 24x7 |10 Feb 2026 9:21 PM ISTஆற்றின் கரையில் நாகரிகம் பரவியது என்பது விளக்கும்போது வகையில் காவிரி படுகை குழுவினர் வரலாற்று ஆய்வு
குமாரபாளையம் காவிரி படுகை குழுவினரின் மற்றொரு கள பயணமாக ஆற்றின் கரையில் நாகரிகம் உருவானது குறித்தும் அந்த நாகரிகத்தின் தடங்கள் காலத்தைத் தாண்டி கற்களிலும், கோயில்களிலும், கல்வெட்டுகளிலும் நிலைத்து நிற்கின்றன என்பதை அறியும் வகையில் அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நொய்யல் ஆற்றங்கரை நாகரிகங்களை அறியும் நோக்கில் நடைபெற்ற இந்த ஒரு நாள் வரலாற்றுப் பயணம், ஒரு சாதாரண சுற்றுலாவாக அல்லாமல் பண்பாடு, வரலாறு, சமூக நினைவுகளை இணைக்கும் அறிவுப் பயணமாக அமைந்தது. சர்க்கார் பெரியபாளையம், கொடுமணல், திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நடுகற்கள், பழமையான கோயில்கள், கல்வெட்டுகள் மற்றும் தொன்மையான வாழ்விடத் தடங்கள் ஆகியவை, சங்க காலம் முதல் இன்று வரை மனித சமூகம் எவ்வாறு வளர்ந்தது என்பதற்கான உயிருள்ள சாட்சிகளாக நம்முன் நிற்கின்றன என இத்தலங்கள் வரலாறு நூல்களில் மட்டுமல்ல; மண்ணின் அடுக்குகளிலும், மனித நினைவுகளிலும் வாழ்கிறது என்பதை உணரும் வகையில் அமைந்தது இந்தப் பயணத்தின் சிறப்பு வெறும் பார்வையாளர்களாக மட்டுமல்ல கேள்விகள், கலந்துரையாடல்கள், விளக்கங்கள் மற்றும் அனுபவப் பகிர்வுகள். இதன் மூலம் ஒவ்வொரு இடமும் ஒரு பாடமாகவும், ஒவ்வொரு கல்லும் ஒரு வரலாற்றுச் செய்தியாகவும் மாறி அமைந்தது இந்த அர்த்தமுள்ள முயற்சிக்கு அடித்தளமாக இருந்தவர்கள் காவிரி படுகை குழுவினர். ஆற்றங்கரை நாகரிகங்கள், பண்பாட்டு மரபுகள், வரலாற்று நினைவுகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன், தொடர்ந்து களப்பணியிலும் ஆய்விலும் ஈடுபட்டு வரும் இந்தக் குழுவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை. அறிவைப் பகிர வேண்டும், வரலாற்றை மக்களுக்குச் சொந்தமாக்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்புணர்வே இவர்களின் அடையாளமாக அமைந்தது
Next Story
