குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

X
Kulithalai King 24x7 |11 Feb 2026 9:55 AM ISTகல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அதில் யூஜிசி நிர்ணயித்த 57 ஆயிரத்து 700 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். 12 மாத ஊதியம் வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு 25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், அனைத்து கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பி.எப் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வகுப்பு புறக்கணிப்பு செய்து 55 கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
