மின்வாரிய ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை.

X
Paramathi Velur King 24x7 |11 Feb 2026 6:41 PM ISTபரமத்தி வேலூர் அருகே மின்வாரிய ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர், பிப்.11: பரமத்திவேலூர் தாலுகா மேலபாலப்பட்டி காட்டுத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவர் மின்வாரியத்தில் கேங் மேனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராணி (33). இவர் அங்கன்வாடி உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சத்தீஸ்வரன் என்ற மகனும், நித்தியஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். செந்தில்குமாருக்கு அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக செந்தில்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். மனைவி ராணியும் நாமக்கல்லில் நடைபெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்று விட்டார். வீட்டில் செந்தில்குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். மாலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் படுக்கை அறையில் தூக்கு போட்டு தந்தை தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அழுது கொண்டு வெளியே ஓடி வந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து தந்தை தூக்கில் தொங்கும் கொண்டிருப்பதை தெரிவித்துள்ளனர். மேலும் அருகில் இருந்தவர் செந்தில்குமாரின் மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
